மகாகவி பாரதி எழுதிய – ‘அழகு’ தெய்வம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய «அழகு தெய்வம்» அவரது தத்துவக் கவிதைகளில் தனித்துவமான இடத்தைப் பெறும் படைப்பாகும். மங்கிய நிலவொளியில் பாரதி ஒரு கனவு காண்கிறார். அந்தக் கனவில், பதினாறு வயது இளமங்கை ஒருவர் அவரது முன்னால் தோன்றுகிறாள். அவளுடைய முகம் பௌர்ணமி நிலவைப் போல ஒளிர்கிறது அவளுடைய புன்னகை புதுநிலவின் புத்துணர்ச்சியை நினைவூட்டுகிறது. அந்த மங்கையைப் பாரதி “அழகு தெய்வம்” என்று உருவகப்படுத்துகிறார். இளமை, இயற்கை, ஒளி, பிரகாசம், புதுமை என்று, மனித மனம் இயல்பாக…














